
சதுரங்க உலகின் மிகவும் விறுவிறுப்பான மற்றும் எதிர்பார்க்கப்படும் தொடரான 2025 ஃபிடே (FIDE) உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் இம்முறை கத்தாரில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளன.
வரும் டிசம்பர் 26 முதல் 30 வரை தோஹா, கத்தார் பல்கலைக்கழகத்தில் உள்ள விளையாட்டு மற்றும் நிகழ்வுகள் வளாகத்தில் (Sports and Events Complex, Qatar University) இப்போட்டிகள் நடைபெறுகின்றன.
இத்தொடரில் உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சன் (Magnus Carlsen), இந்தியாவின் இளம் செஸ் நட்ச்சத்திரங்களான டி. குகேஷ் (Gukesh D), பிரக்ஞானந்தா (Praggnanandhaa), அர்ஜுன் எரிகைசி (Arjun Erigaisi) ஆகியோர் பங்கேற்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுடன் இயன் நெபோம்னிச்சி (Ian Nepomniachtchi), ஃபேபியானோ கருவானா (Fabiano Caruana) உள்ளிட்ட உலகின் தலைசிறந்த கிராண்ட்மாஸ்டர்களும் களமிறங்குகின்றனர்.
டிக்கெட்டுகள் விற்பனை :
ஒரு நாள் போட்டிக்கான டிக்கெட் (Day Pass): கத்தார் ரியால் 25 முதல்.
ரேபிட் போட்டிகளுக்கான முழு சீசன் பாஸ் (All-Days Rapid Pass): கத்தார் ரியால் 100 முதல்.
முழுத் தொடருக்கான பாஸ் (Full-Event Pass): கத்தார் ரியால் 160 முதல்.


