
(அதீகா மசூர்)
துபாயில் நடைபெற்ற 3வது ஆசிய இளையோர் பாரா விளையாட்டு போட்டிகளில் ஹெம்மதகமையை சேர்ந்த இளம் வீரர் யூனுஸ் இஷாம்
வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இலங்கை பாராலிம்பிக் தேசிய சங்கம் மூலம் 8 வீரர்கள் இந்தப் போட்டிக்காக தெரிவுசெய்யப்பட்டனர். 35 ஆசிய நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த விளையாட்டுப் போட்டி 11 பாரா விளையாட்டு பிரிவிகளில் நடைபெற்றன.
இப் போட்டியில் U20 ஆண்கள் 400m ஓட்டப் போட்டியில் ஹெம்மதகம , தும்புழுவாவ super light sports club ஐ பிரதிநித்துவப்படுத்தி கலந்து கொண்ட யூனுஸ் இஷாம் 1 நிமிடம் 1.95 விநாடிகளில் பந்தயத்தை முடித்து மூன்றாம் இடத்தை பிடித்துக்கொண்டார்.
யூனுஸ் இஷாமின் இச் சாதனை ஹெம்மதங்கமையின் விளையாட்டு வரலாற்றில் மேலும் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது.


