கொல்கத்தா வந்த மெஸ்ஸி: மகனுடன் சென்று சந்தித்த ஷாருக்கான் – 70 அடி உயர சிலை இன்று திறப்பு

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் தனது 70 அடி உயர சிலையை இன்று (டிசம்பர் 13) திறந்து வைக்கிறார். இந்த பிரம்மாண்ட விழாவில் மேற்கு வங்க அமைச்சர் சுஜித் போஸ் மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இதனிடையே, விழா நடைபெறும் இடத்தில் ஷாருக்கான் மற்றும் அவரது மகன் ஆப்ராம் கான் ஆகியோர் மெஸ்ஸியைச் சந்தித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.