இலங்கைக்கு லுலு (Lulu) குழுமத் தலைவர் 3.2 கோடி ரூபா நிதியுதவி!

இலங்கையில் வீசிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் வர்த்தகப் பிரமுகர்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, பிரபல லுலு (Lulu) குழுமத்தின் தலைவர் எம்.ஏ. யூசுப் அலி பெரும் நிதியுதவியொன்றை வழங்கியுள்ளார்.

அபுதாபியைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் லுலு குழுமத்தின் (Lulu Group) தலைவர் எம்.ஏ. யூசுப் அலி (Yusuffali MA), இலங்கையின் நிவாரண மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக 3 கோடியே 20 இலட்சம் இலங்கை ரூபாயை (சுமார் 1,00,000 அமெரிக்க டொலர்) நிதியுதவியாக வழங்கியுள்ளார்.

திங்கட்கிழமை அபுதாபியில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வின் போது, ஐக்கிய அரபு இராச்சியத்துக்கான இலங்கைத் தூதுவர் அருஷா குரேயிடம் (Arusha Cooray) அவர் இதற்கான காசோலையைக் கையளித்தார்.

இந்த நிதியானது சூறாவளியால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்காக, தேசிய நிவாரண நிதியத்திற்குப் பயன்படுத்தப்படவுள்ளது.