
கத்தார் ஏர்வேஸ் குழுமத்தின் (Qatar Airways Group) புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) ஹமத் அலி அல்-காதர் (Hamad Ali Al-Khater) நியமிக்கப்பட்டுள்ளார். பொறியாளர் பத்ர் முகமது அல்-மீர் (Engr. Badr Mohammed Al-Meer) அவர்களுக்குப் பதிலாக ஹமத் அலி அல்-காதர் இந்தப் பொறுப்பை ஏற்கிறார்.இந்த பதவிக்கு வருவதற்கு முன்பாக, ஹமத் அலி அல்-காதர், ஹமத் சர்வதேச விமான நிலையத்தின் தலைமை இயக்க அதிகாரியாக (COO) பணியாற்றினார்.


