கத்தார் அமீர் தலைமையில் சமூக முன்னேற்றத்திற்கான இரண்டாம் உலக உச்சி மாநாடு!

கத்தார் தேசிய மாநாட்டு மையத்தில் இன்று (04) செவ்வாய்க்கிழமை சமூக முன்னேற்றத்திற்கான இரண்டாம் உலக உச்சி மாநாடு அமீர் அவர்களின் தலைமையில் சிறப்பாக தொடங்கியது.

இந்த மாநாட்டில் நட்பு நாடுகளின் மன்னர்கள், உயரதிகாரிகள், அரசுத் தலைவர்கள் மற்றும் பங்கேற்பாளர் குழுவினரும் கலந்து கொண்டனர்.

மாநாடு அமர்வின் போது கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி அவர்கள் சமூக முன்னேற்றத்திற்கான இரண்டாம் உலக உச்சி மாநாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.