மாற்று விழி சஞ்சிகை வெளியீட்டு விழா – அட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரி

(எம். ஜே.எம். சஜீத்) அட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரியின் விஷேட கல்விபிரிவு இரண்டாம் வருட ஆசிரிய பயிலுனர்களினால் மாற்று விழி சஞ்சிகை வெளியீட்டு விழா விரிவுரையாளர் அபூபக்கர் நளீம் தலைமையில் இன்றைய தினம் (02) கல்லூரி ஆராதணை மண்டபத்தில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்லூரியின் பீடாதிபதி எம். சீ. ஜூனைட், இவ்நூலினை விமர்சனம் செய்வதற்காக எம்.எல். முஹம்மட் லாபிர்( ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் – முறைசாராக் கல்வ) கல்லூரியின் நிருவாகத்திற்கான உப பீடாதிபதி எம்.ஐ. ஜஃபர், கல்விகான உப பீடாதிபதி ஏ.ஜி. அஹமட் நழீர் மற்றும் பதிவாளர் எச்.எம்.ஏ. ஹசன், விரிவுரை இணைப்பாளர்கள், பீடத் தலைவர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.