
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் சீரான வானிலை காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
கடல் பிராந்தியங்களில்
இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் வட கரையோரப் பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள “அர்னாப்” சூறாவளி தற்பொழுது பல மிக்க தாழமுக்கமாக நலிவடைந்து செல்கிறது. இது இன்று காலையளவில் வடக்கு நோக்கி நகர்ந்து நகர்ந்து செல்வதுடன் தாழ் அமுக்கமாக மேலும் நலிவடையும். மேலும் இன்று மாலை 05.30 மணியளவில் தாழ் அமுக்கப் பிரதேசமாக வலுவிழந்து செல்லக்கூடும். இதன் தாக்கம் வங்காள விரிகுடாவின் ஆழமான கடல் பிராந்தியங்களில் படிப்படியாக குறைவடையும். ஆனபடியால் கடல்சார் ஊழியர்களுக்கும் பல நாட்கள் மீன்பிடிக்கு செல்பவர்களுக்குமான தடை உத்தரவு நீக்கப்படுகின்றது.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 – 35 km வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.
புத்தளம் தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான அத்துடன் காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
சிரேஸ்ட வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான கௌரவ கலாநிதி
மொஹமட் சாலிஹீன்.


