
முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இன்று (20) காலை இலஞ்சம், ஊழல் பற்றி விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளார்.
ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய அவர் இன்று அங்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜீ.எல். பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில் இடம்பெற்ற கூட்டமொன்று தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையின் ஒரு பகுதியாகவே அவரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விசாரணை தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.


