
முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதா என்பதை உறுதிப்படுத்தி, இன்று பிற்பகல் 2 மணிக்கு முன்னர் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டுள்ளார்.
‘சிரிலிய சவிய’ வங்கிக் கணக்கு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்த நிலையில், அரச தரப்பு அதனை உறுதிப்படுத்தும் உத்தியோகபூர்வ தகவல் கிடைக்கவில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்ட நீதவான், வழக்கு விசாரணையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்துள்ளார்.


