முத்துராஜவேலயிலிருந்து கட்டுநாயக்கவுக்கு புதிய விமான எரிபொருள் குழாய்: ஜனாதிபதி இன்று ஆரம்பித்து வைக்கிறார்!

முத்துராஜவேலயிலிருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு விமான எரிபொருளைக் கொண்டு செல்வதற்கான 21 கிலோமீற்றர் நீளமான புதிய குழாய் பதிக்கும் பணிகள் இன்று (02) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமாகவுள்ளன.

இதனுடன் சேர்த்து, 40,000 கனமீற்றர் கொள்ளளவு கொண்ட மூன்று எண்ணெய் சேமிப்புத் தாங்கிகளை அமைக்கும் பணிகளும் இன்று தொடக்கம் பெறவுள்ளன.

இத்திட்டத்திற்காக 40.84 மில்லியன் அமெரிக்க டொலர்களும் 8,548.75 மில்லியன் இலங்கை ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நேரடிக் குழாய் வழியமைப்பின் மூலம் எவ்வித தடையுமின்றி, பாதுகாப்பாகவும் குறைந்த செலவிலும் விமான நிலையத்திற்கு தொடர்ந்து எரிபொருளை விநியோகிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.