பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 12 தானியங்கி பயணிகள் கடவுச்சீட்டு பரிசோதனை வாயில்கள் நிறுவ அமைச்சரவை அனுமதி

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) 12 தானியங்கி பயணிகள் கடவுச்சீட்டு பரிசோதனை (E-Gates) வாயில்களைக் கொள்வனவு செய்து நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

முன்னதாக 04 தானியங்கி வாயில்களைக் கொள்வனவு செய்ய 2025 மே 19 அன்று அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், அதிகரித்து வரும் பயணிகள் வருகை மற்றும் வர்த்தக அபிவிருத்தியைக் கருத்தில் கொண்டு இந்த எண்ணிக்கை 12 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

2027 இல் அறிமுகப்படுத்தப்படவுள்ள ‘E-Passport’ முறைமைக்கு அமைவாக, இதுவரை இலங்கையர்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்த இச்சேவை, இனிவரும் காலங்களில் நாட்டுக்கு வருகை தரும் மற்றும் வெளியேறும் வெளிநாட்டவர்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

இதன்படி, எஞ்சிய 08 தானியங்கி வாயில்களையும் சேர்த்து மொத்தம் 12 வாயில்களைக் கொள்வனவு செய்வதற்கான பொதுப்பலன் திட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.