
உலக மனநல தினத்தை முன்னிட்டு ‘Let’sTALK & Walk 2026’ விழிப்புணர்வு நடைபவனி ஒக்டோபர் 10 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. காலை 7.00 மணிக்கு கொழும்பு 07, விகாரமஹாதேவி பூங்காவின் ‘Band Stand Ground’ பகுதியிலிருந்து ஆரம்பமாகும் இந்நடைபவனி, 5 கிலோமீட்டருக்கும் குறைவான தூரம் கொண்ட பாதை வழியே சென்று மீண்டும் பூங்காவை வந்தடையும்.
மனநலம் குறித்து திறந்தமனதுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வது, ஒருவரோடொருவர் தொடர்பில் இருப்பது மற்றும் தேவையான சந்தர்ப்பங்களில் உதவியைப் பெற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதே இச்செயற்திட்டத்தின் நோக்கமாகும். இந்நடைபவனி மூலம் திரட்டப்படும் நிதி, பாடசாலை மாணவர்களுடன் இணைந்து செயற்படுத்தப்படும் ‘Let’sTALK’ திட்டத்திற்காகப் பயன்படுத்தப்படவுள்ளதுடன், இலங்கையிலுள்ள 1,000 பாடசாலை மாணவர்களிடம் இத்திட்டத்தைக் கொண்டு சேர்ப்பதும் இதன் ஒரு நோக்கமாகும்.
பிரச்சினை ஒன்று இருக்கும் போது அதனைப் பற்றிப் பேசுதல், அப்புத்திகாரியையும் அவரது பிரச்சினையையும் ஏற்றுக்கொள்ளுதல், எவ்வித முன்முடிவுகளும் இன்றி புரிந்துகொள்வதற்காகச் செவிமடுத்தல் மற்றும் தொடர்பைப் பேணி உதவி வழங்குதல் என்பனவே ‘Let’sTALK’ திட்டத்தின் அடிப்படை மையக்கருத்தாகும். மேலும், இலங்கையில் இலவசமாகவும் இரகசியமாகவும் அவசர உதவிச் சேவையை வழங்கும் 1333 தொலைபேசி சேவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அதன் தொடர்ச்சியான இயங்குதளத்திற்கு ஆதரவளிப்பதும் இத்திட்டத்தின் ஏனைய நோக்கங்களில் அடங்கும்.


