
சமூக வலைத்தளப் பதிவு ஒன்றிற்காக சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசாவின் உயிரைக் காப்பாற்றும் முயற்சிகளுக்கு, மாலத்தீவின் முன்னாள் அதிபர் மொஹமட் நஷீத் தனது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி சட்டத்தரணிகளான பைஸர் முஸ்தபா மற்றும் உபுல் குமாரப்பெரும ஆகியோர் இராஜதந்திர தூதுக்குழுவாக மாலத்தீவில் நஷீத்தைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அனோஜனின் கருத்துக்கள் முஸ்லிம் சமூகத்தைப் பாதித்துள்ளதை ஏற்றுக்கொண்ட நஷீத், மனிதநேய அடிப்படையில் அவரது உயிரைக் காப்பாற்ற உதவுவதாக உறுதியளித்தார்.
ஜனாதிபதி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் தலையீட்டால், இவர்கள் இருவரும் விரைவில் சவூதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
இந்த இராஜதந்திரப் பயணத்திற்கான அனைத்துச் செலவுகளையும் சட்டத்தரணிகளே ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


