
(செய்தியாளர் : எம்.எஸ்.எம்.சஜீ)
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் “அத்தம” தேசிய தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், காத்தான்குடி 05 ஜாமியுழ்ழாபிரீன் வட்டார ஆற்றங்கரைப் பகுதி, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் வழிகாட்டலில், காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜுத் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் இன்று தூய்மைப்படுத்தப்பட்டது.
நீண்டகாலமாக முறையான பராமரிப்பின்றி, பற்றைக் காடாகவும் பயனற்ற மரங்கள் மற்றும் செடிகள் வளர்ந்த நிலையிலும் காணப்பட்ட குறித்த பகுதி, மக்கள் குடியிருப்புகள் மற்றும் காத்தான்குடி 05 ஜாமியுழ்ழாபிரீன் பாடசாலைக்கு அண்மையில் அமைந்துள்ள நிலையில், இத்தூய்மைப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இத்தூய்மைப்படுத்தும் நடவடிக்கையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ், காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜுத், இராணுவத்தினர், பொலிஸார், விமானப்படையினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
மக்கள் குடியிருப்புகள் மற்றும் பாடசாலைச் சூழலைச் சுத்தமாகவும் சுகாதாரமானதாகவும் பேணும் நோக்கில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


