
சர்வதேசக் கிரிக்கெட்டில் இந்தியக் கிரிக்கெட் வாரியம் (BCCI) மற்றும் இந்திய அரசியல்வாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதற்கு எதிராக உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் “இந்தியக் கிரிக்கெட்டைப் புறக்கணிப்போம் – ஜெய் ஷாவை ஐசிசியில் இருந்து நீக்குவோம்” என்ற போர்க்கொடியை உயர்த்தியுள்ளனர்.
ஐசிசி தலைவரான ஜெ ஷாவின் கீழ் விளையாட்டின் நடுநிலைமை கெட்டுவிட்டதாகவும், ஆசியக் கோப்பை உள்ளிட்ட போட்டிகளில் அரசியல் தலையீடுகள் மற்றும் அட்டவணை மாற்றங்கள் மூலம் பிற அணிகள் அவமதிக்கப்படுவதாகவும் ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த ஏகபோக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க ஜெ ஷா உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும், இந்திய அணியுடனான போட்டிகளை ஏனைய நாடுகள் புறக்கணிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.


