தோப்பூர் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்ற மீலாதுன் நபி தின விழா!

(உவைஸ் முஹமட் வசீம்)

மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு தோப்பூர் தி/மூ/பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் சிறப்பு நிகழ்வு மிகச் சிறப்பாக நேற்று (12) நடைபெற்றது.

கல்லூரியின் அதிபர் எம். எம். ஜெய்சர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தோப்பூர் ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி நார்தீஸ் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

இதில் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் பிறப்பு, சிறப்புகள் மற்றும் நற்பண்புகளை எடுத்துரைக்கும் வகையில் மாணவர்களால் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

மேலும், மாணவர்களின் அறிவையும் இஸ்லாமிய அறிவையும் மேம்படுத்தும் வகையில் இஸ்லாமிய வினாடி வினா நிகழ்வும் நடத்தப்பட்டதுடன், வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

நிகழ்வு மாணவர்களின் பங்கேற்புடன் சிறப்பாக நிறைவடைந்தது.