
ஹன்ஷி அழகுக் கலை நிலையத்தின் பட்டமளிப்பு விழா பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 10 ஆம் திகதி நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஹாஷிம் உமர் பௌண்டேஷனின் பணிப்பாளர் மரியம் ஹாஷிம் உமர் கலந்து கொண்டு பாடநெறியை பூர்த்தி செய்த மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் என்பவற்றை வழங்கி வைத்தார்.


