10 மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை!

ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் பொலன்னறுவை, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (04) இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் வகையில் 10 மாவட்டங்களுக்கு இந்தச் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.