ஒரே நாளில் இரண்டு முக்கிய அரசியல்வாதிகள் கைது, இலங்கை அரசியலில் பரபரப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானக் கொள்வனவு மற்றும் நிதி முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) அவர் இன்று காலை முன்னிலையானார்.

அவரிடம் தீவிர விசாரணை மற்றும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் உத்தியோகபூர்வமாகக் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, பொல்கொல்ல ராஜபக்ஷ மண்டபத்திற்கு நாற்காலிகள் கொள்வனவு செய்ததில் நடைமுறைகளை மீறி செயற்பட்டதன் மூலம் மத்திய பொறியியல் கலந்தாய்வு பணியகத்திற்கு 79 இலட்சம் நிதி இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் தனியார் நிறுவன உரிமையாளர் ஒருவர் இன்று (04) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.