45 கோடியில் பொலன்னறுவை பாலங்கள் புனரமைப்பு: அமைச்சர் ஆய்வு

பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதியில் சுமார் ரூ.45 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு வரும் கொட்டலிய மற்றும் கல்லேல்ல பாலங்களின் அபிவிருத்திப் பணிகளை அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் இன்று (04) ஆய்வு செய்தனர்.

இப்பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து, பாலங்களை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.மேலும், மன்னம்பிட்டிய பகுதியில் வன யானைகள் ரயில் பாதையைப் பாதுகாப்பாகக் கடப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள விசேட வசதிகளையும் குழுவினர் பார்வையிட்டனர்.

மக்களின் தேவைகளை நிறைவேற்றும் அதேவேளையில், மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான சகவாழ்வைப் பாதுகாக்கும் தீர்வுகளும் அரசின் அபிவிருத்தி அணுகுமுறையில் முக்கிய அங்கமாகும் என இங்கு வலியுறுத்தப்பட்டது.