சர்வதேச அல்குர்ஆன் போட்டியில் இலங்கைக்கு பெருமை சேர்த்த மாணவர்; 49 லட்சம் ரூபாய் பரிசு!

சவூதி அரேபியாவின் மக்கா நகரில் நடைபெற்ற 46ஆவது மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டியில், இலங்கையைச் சேர்ந்த மாணவர் முஹம்மத் இம்தாத் மூன்றாம் இடத்தைப் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இப்போட்டியின் ஐந்தாவது பிரிவில் பங்கேற்ற அவர், 55,000 சவூதி ரியல்களை (சுமார் 49 லட்சம் இலங்கை ரூபாய்) பரிசாகப் வென்றுள்ளார். முன்னதாக, இலங்கையில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் இவர் முதலிடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் பல்வேறு நாட்டு ஹாபிழ்கள் பங்கேற்ற இம்மாபெரும் சர்வதேச அரங்கில் இலங்கை மாணவர் படைத்துள்ள இச்சாதனைக்கு பலரும் தமது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.