கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய சகா துபாயில் கைது

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘காஞ்சிபானி இம்ரான்’ என்பவரின் நெருங்கிய சகா ஒருவர் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ரஸ் அல்-கைமாவில் (Ras Al-Khaimah) கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட நபர் அவிஷ்க மதுஷான் அபேகுணவர்தன எனவும், இவர் “வாணத்தே சாது” (Wanathe Chathu) என்று அழைக்கப்படுபவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் பாதுகாப்புப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பாதுகாப்புத் துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.