
கொழும்பு — ‘L’ பலகை பொருத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் பயிற்சி அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்கள் அதிவேக வீதிகளுக்குள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை மீண்டும் நினைவூட்டியுள்ளது.
சாரதிப் பயிற்சி அனுமதிப்பத்திரம் அதிவேக வீதிகளுக்கு செல்லுபடியாகாது என்பதுடன், முழுமையான அனுமதிப்பத்திரம் பெற்ற ஒருவர் அருகில் இருந்தாலும் ‘L’ பலகை வாகனங்களை செலுத்த முடியாது. மீறுபவர்கள் நுழைவாயிலிலேயே தடுக்கப்பட்டு அபராதம் அல்லது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இத்தகைய விபத்துக்களுக்கு காப்பீட்டு இழப்பீடுகளும் நிராகரிக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


