
2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவான மாணவர்களைப் பதிவுசெய்யும் நடவடிக்கைகள் இன்று (06) முதல் ஆகஸ்ட் 14ஆம் திகதி வரை இடம்பெறும் எனப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) அறிவித்துள்ளது.
இக்காலப்பகுதிக்குள் மாணவர்கள் தமக்கான பதிவுகளை முறைப்படி பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், தெரிவுசெய்யப்பட்டுள்ள பாடநெறிகள் அல்லது பல்கலைக்கழகங்கள் தொடர்பில் மாணவர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனைகள் அல்லது மாற்றங்கள் தொடர்பான மேன்முறையீடுகள் (Appeals) இருப்பின், அவற்றை எதிர்வரும் ஆகஸ்ட் 21ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த காலக்கெடுவுக்குப் பின்னர் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.


