
ஹற்றன், பொல்பீட்டிய மொரஹேனகம பகுதியில் வீடொன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டதில் காணாமல்போயிருந்த இரு பெண்கள் மற்றும் ஒரு ஆடவர் என மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இந்த அசம்பாவிதத்தில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் வீடொன்றின் மீது மண் திட்டு சரிந்து விழுந்ததைத் தொடர்ந்து, மீட்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்தநிலையிலேயே இச்சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


