கினிகத்ஹேனையில் மண்சரிவு நால்வர் காணாமல் போயுள்ளதாக மாவட்ட செயலாளர் தகவல்.!!

நுவரெலியாநுவரெலியா மாவட்டம், கினிகத்ஹேனை பிரதேசத்தில் பெய்துவரும் தொடர்ச்சியான அடைமழை காரணமாக ஏற்பட்ட திடீர் மண்சரிவில், வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்த விபத்தில் நால்வர் காணாமல் போயுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.பாதிக்கப்பட்ட பகுதியில் தற்போது மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மேலதிக விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.