
காலி, மகாமோதர பகுதியில் புதிய சிறைச்சாலையை நிறுவுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வெளியிட்டுள்ளார். சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
“மகாமோதர சிறைச்சாலை” என அழைக்கப்படவுள்ள இந்த வளாகத்தின் அதிகார வரம்பு முழு இலங்கையையும் உள்ளடக்கியது. மூடப்பட்ட மகாமோதர வைத்தியசாலையின் ஒரு பகுதியில் தற்காலிகமாக இந்த சிறைச்சாலை இயங்கவுள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்களைத் தொடர்ந்து, நாட்டின் சிறைச்சாலை பாதுகாப்பு மற்றும் கைதிகள் நெருக்கடியைக் கையாளும் அவசர நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


