
முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவினால் (CIABOC) இன்று (08) கைது செய்யப்பட்டுள்ளார். ஆணைக்குழுவின் தகவல்படி, இந்த கைது நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், முன்னாள் அமைச்சரின் கைதுக்கான காரணங்கள் மற்றும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்த மேலதிக விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
ஜகத் புஷ்பகுமார 2020 நாடாளுமன்றத் தேர்தலில் மொனராகலை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) வேட்பாளராகப் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


