அர்ஜென்டினாவை கதறவிட்ட கேப் வெர்தே அணி! – சொந்த கோலால் உலகக்கோப்பையில் இருந்து வெளியேறிய கேப் வெர்தே

மியாமி மைதானத்தில் நடந்த பிபா உலகக்கோப்பை நாக்-அவுட் சுற்றில், அர்ஜென்டினா மற்றும் கேப் வெர்தே அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் மெஸ்ஸி கோல் அடிக்க, இரண்டாம் பாதியில் கேப் வெர்தே பதிலடி கொடுத்ததால் ஆட்டம் 1-1 எனச் சமனானது. கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடிக்க, 2-2 எனப் போட்டி நீடித்தது.

ஆட்டத்தின் 111-வது நிமிடத்தில் கேப் வெர்தே வீரர் டினே போர்ஜெஸ் துரதிருஷ்டவசமாகச் சொந்த அணிக்கு எதிராகவே (Own Goal) கோல் அடித்ததால், அர்ஜென்டினா 3-2 என்ற கணக்கில் த்ரில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இப்போட்டியின் மூலம், உலகக்கோப்பை வரலாற்றில் 30 போட்டிகளில் விளையாடிய மற்றும் தொடர்ச்சியாக 8 போட்டிகளில் கோல் அடித்த ஒரே வீரர் என்ற வரலாற்றுச் சாதனைகளை லியோனல் மெஸ்ஸி படைத்தார்.