
ஃபாக்ஸ் நியூஸ் (Fox News) ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், ஈரான் மீதான போர் “மிக விரைவில் முடிவுக்கு வரவுள்ளது” என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் தரப்பு தற்போது பேச்சுவார்த்தை நடத்தி ஒரு உடன்பாட்டிற்கு வர (Make a deal) மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மறுபுறம், ஈரானின் அனைத்து கடல்வழி வர்த்தகத்தையும் முடக்கும் வகையில் CENTCOM முழுமையான முற்றுகையை அமல்படுத்தியுள்ளது. சீனா ஈரானிடம் இருந்து எண்ணெய் பெறுவதைத் தடுக்க அமெரிக்கா முயலும் வேளையில், ரஷ்யா அதற்குப் பதிலாக உதவ முன்வந்துள்ளது.
இதற்கிடையில், லெபனானில் நிலவும் மனிதாபிமான நெருக்கடியைத் தடுக்க கனடா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட 10 நாடுகள் போரை நிறுத்தக் கோரிக்கை விடுத்துள்ளன.


