டிட்வா சூறாவளி: சுகாதாரத் துறைக்கு 21 பில்லியன் ரூபா நஷ்டம் – அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ

இலங்கையை அண்மையில் தாக்கிய ‘டிட்வா’ (Ditwah) கடும் சூறாவளி காரணமாக நாட்டின் தேசிய சுகாதார அமைப்புக்கு சுமார் 21 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.சுகாதார அமைச்சில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.