
இலங்கையின் சுற்றுலாத்துறை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், ஒரே ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த புதிய சாதனை இன்று (29) பதிவாகியுள்ளது.இன்று காலை நிலவரப்படி, இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 2,333,797 ஆக உயர்ந்துள்ளது. இது இலங்கையின் சுற்றுலா வரலாற்றில் ஒரு வருடத்தில் பதிவான அதிகூடிய வருகையாகும். இதற்கு முன்னர் 2018-ஆம் ஆண்டில் 2,333,796 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தமையே சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.


