
1982 ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய முன்னாள் சுழல்பந்து வீச்சாளரான டி.எஸ். டி. சில்வா காலமானார்.
தனது 83வது வயதில் லண்டனில் அவர் காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
1942 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் திகதி பிறந்த டி. எஸ். டி சில்வா இலங்கை அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர் ஆவார். அத்துடன், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணிக்கு தலைமை தாங்கியுள்ளார்.
இலங்கைக்காக 12 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 41 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், விளையாட்டு வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் பயிற்சியாளர், அணி முகாமையாளர் மற்றும் இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.
மேலும், 2009 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
அவரது பதவிக்காலத்தில், நாடு முழுவதும் பல சர்வதேச கிரிக்கெட் மைதானங்கள் நிர்;மானிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


