
(எம்.பஹத் ஜுனைட்)
அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட காத்தான்குடி மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக காத்தான்குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் சேகரிக்கப்பட்ட உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய ஆயிரம் பொதிகள் இன்று சனிக்கிழமை (13) காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மெளஜூத் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பிரதித் தலைவர் எம்.சீ.எம்.ஏ.சத்தார் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மெளஜூத் , காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் மற்றும் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா காத்தான்குடி கிளை தலைவர் அஷ்ஷேய்க் ஹாரூன் (ரஷாதி) மற்றும் உதவிப் பிரதேச செயலாளர், சம்மேளன உறுப்பினர்கள், சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.


