
கத்தாரில் நடைபெற்று வரும் ஃபிஃபா அரபு கோப்பை 2025 கால்பந்து தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் குரூப் பி (Group B) பிரிவின் 3-வது சுற்று ஆட்டங்களில் நான்கு அணிகள் களமிறங்குகின்றனஇன்று இரவு ஒரே நேரத்தில் இரண்டு முக்கிய போட்டிகள் நடைபெறவுள்ளன.இன்று இரவு நடைபெறும் முதல் ஆட்டத்தில், மொராக்கோ (Morocco) மற்றும் சவுதி அரேபியா (Saudi Arabia) அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி கத்தாரின் பிரம்மாண்டமான லுசைல் ஸ்டேடியத்தில் (Lusail Stadium) நடைபெறுகிறது.அதே நேரத்தில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் ஓமன் (Oman) அணியானது கொமொரோஸ் (Comoros) அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி ஸ்டேடியம் 974 மைதானத்தில் நடைபெறவுள்ளது.


