
இலங்கையில் நிலவி வரும் கடுமையான அனர்த்த சூழ்நிலையை கருத்திற் கொண்டு சில அரச ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவலில், அவசர சேவைகள் தடையின்றி நடைபெறுவதற்காக சுகாதாரத் துறையினரின் அனைத்து விடுமுறைகளும் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன என கூறப்பட்டுள்ளது.அத்துடன், நாட்டின் பல பகுதிகளில் நடைபெறும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை வலுப்படுத்தும் நோக்கில் போலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக போலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.


