
கத்தாரில் நடைபெற்று வரும் ஃபிஃபா அரபு கிண்ணம் 2025 கால்பந்து தொடரின் குழுநிலை சுற்று ஆட்டங்கள் நேற்று (டிசம்பர் 3) முடிவடைந்தன.
அஹமத் பின் அலி மைதானத்தில் நடைபெற்ற அல்ஜீரியா மற்றும் சூடான் அணிகளுக்கு இடையேயான மோதல், இரு அணிகளின் தடுப்பாட்ட வலிமையால் கோல் ஏதுமின்றி 0-0 என்ற கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. மற்றொரு போட்டியில், மைதானம் 974-ல் பலப்பரீட்சை செய்த ஈராக் அணி, பஹ்ரைனை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றிப் பெற்றது.
இந்த நிலையில், அல் பேத் மைதானத்தில் நடைபெற்ற முக்கிய போட்டியில், ஜோர்டன் அணி ஐக்கிய அரபு அமீரகத்தை (UAE) 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது.
இந்த சிறப்பான வெற்றியின் மூலம், ஜோர்டன் அணி உடனடியாக குழு C பிரிவில் ஆரம்ப முதலிடத்தைப் பிடித்துள்ளது.



