நாளை இடியுடன் கூடிய மழை ஏற்படும் சாத்தியம்: பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்பு

2025 டிசம்பர் 02ஆம் திகதி பிற்பகல் 02.00 மணிக்கு வெளியிடப்பட்டது.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென்மாகாணங்களிலும், குருநாகல் மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பணிமூட்டமான நிலை காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.