FIFA U-17 World Cup – QATAR : வரலாறு படைத்த ரசிகர்கள் வருகை!

கத்தாரில் நடைபெற்று வரும் 2025 FIFA U-17 உலகக் கோப்பை™️ கால்பந்துத் தொடரானது, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளது.

இத்தொடரில் விளையாட 48 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், வெறும் 13 நாட்களில் 100 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. மேலும், இளம் வீரர்களின் ஆற்றல்மிக்க ஆட்டத்தைக் காண அரங்குகளை நோக்கி இதுவரை இல்லாத அளவு, 1,50,702 ரசிகர்கள் வருகை தந்துள்ளனர்.