மலையகத்தில் போதைப்பொருள் விற்பனை – ‘மஹரகம அக்கா’ கைது

நுவரெலியா, வெலிமடை, பண்டாரவளை மற்றும் கெப்பட்டிபொல ஆகிய பகுதிகளில் Easy Cash முறையில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த ‘மஹரகம அக்கா’ என அடையாளம் காணப்பட்ட 50 வயதுடைய பெண் ஒருவர், நுவரெலியா பொலிஸ் ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நுவரெலியாவின் பல இடங்களில் வாடிக்கையாளர்களுடன் ஈஸி கேஷ் வழியாகப் பணப் பரிமாற்றம் செய்து வந்தது தெரியவந்துள்ளது. போதைப்பொருள் வாங்கியவர்களின் தொலைபேசிப் பதிவுகளைப் பகுப்பாய்வு செய்தபோது, சந்தேக நபர் ஹங்வெல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்ததை பொலிசார் கண்டறிந்துள்ளனர்.

நீதிமன்;றில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபரின் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது போதைப்பொருள் விற்பனை மூலம் ஈட்டியதாக சந்தேகிக்கப்படும் ரூபா 1,41,000 பணம் மற்றும் 32 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

‘மஹரகம அக்கா’ என அழைக்கப்படும் குறித்த பெண் சந்தேக நபர் நீண்டகாலமாக நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் இரகசியமாக போதைப்பொருள் விற்பனை செய்து வந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.