
தமிழகத்தின் கொங்கு நாட்டின் பாரம்பரிய உணவுகளுக்காகப் புகழ்பெற்ற ஈரோடு அம்மன் மெஸ் தனது புதிய கிளையை கத்தாரில் தொடங்கியுள்ளது.
1980ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த உணவகம், தலைமுறை தலைமுறையாக தனது சுவை மற்றும் தரத்தால் மக்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது..
ஈரோட்டில் தொடங்கிய இந்த உணவகம், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், மேலும் சிங்கப்பூர், துபாய், இலங்கை, மற்றும் இப்போது கத்தார் போன்ற நாடுகளிலும் தனது கிளைகளை வெற்றிகரமாக விரிவுபடுத்தியுள்ளது.
கத்தாரில் நேற்று நவம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற சிறப்பு முன்னோட்ட விருந்து நிகழ்ச்சிக்குப் பிறகு, ஈரோடு அம்மன் மெஸ் கத்தார் கிளை இன்று உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டுள்ளது.
அந்த முன்னோட்ட நிகழ்ச்சியில் கத்தாரிலுள்ள முக்கிய ஊடகவியலாளர்கள், சமூக ஊடக பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சுவையான அனுபவத்தை பெற்றனர்.
இந்த நிகழ்வில் ஸ்கை தமிழ் மீடியாவை அழைத்து, அன்பான வரவேற்பளித்த ஈரோடு அம்மன் மெஸ் குழுவிற்கு இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.


