
கத்தாரில் செயல்பட்டு வரும் இலங்கை மகளிர் சங்கம் (Sri Lankan Women’s Association Qatar – SLWAQ) மற்றும் Asian Medical Center, Wakra இணைந்து நடத்திய இலவச மருத்துவ மற்றும் சுகாதார பரிசோதனை முகாம் கடந்த வெள்ளிக்கிழமை, 17 அக்டோபர் 2025 அன்று வெற்றிகரமாக நடைபெற்றது.காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற்ற இம்முகாமில், 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பல்வேறு சுகாதார பரிசோதனைகள், மருத்துவர் ஆலோசனைகள் மற்றும் நலவாழ்வு வழிகாட்டுதல்கள் பெற்றனர்.இந்த நிகழ்வு சமூகத்தில் சுகாதார விழிப்புணர்வை மேம்படுத்தி, மகளிரின் நலனையும் குடும்ப ஆரோக்கியத்தையும் காக்கும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டதாக அமைப்பினர் தெரிவித்தனர்.


