கத்தாரில் South Indian Gala 2025 விழாவின் உத்தியோகபூர்வ போஸ்டர் வெளியீடு

South Indian Gala 2025 என்ற பெருவிழாவின் உத்தியோகபூர்வ போஸ்டர் வெளியீட்டு விழா கத்தாரில் உள்ள Signature By Marza மண்டபத்தில் கடந்த 22ஆம் தேதி (திங்கட்கிழமை) செப்டம்பர் 2025 சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில், பிரபல தென்னிந்திய நடிகர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் நடனக் குழுக்கள் பங்கேற்று கலை, இசை, நடனம், மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மூலம் பார்வையாளர்களுக்கு மறக்கமுடியாத அனுபவத்தை வழங்க உள்ளனர்.

கத்தாரில் வாழும் தென்னிந்திய சமூகத்தை மட்டுமல்லாது, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் விதமாக இந்த விழா வடிவமைக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், கத்தாரில் நடைபெறும் மிகப்பெரிய கலாசார நிகழ்வாக இருக்கும் எனவும், குடும்பத்தாருடன் கலந்து கொண்டு அனுபவிக்க அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

South Indian Gala 2025 எனும் எதிர்பார்க்கப்படும் பெருவிழா, வரும் நவம்பர் 21 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கத்தாரின் Asian Town அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.