
2026ஆம் ஆண்டுக்கான ஆண்களுக்கான பலோன் டி’ஓர் விருதை இங்கிலாந்தின் ஹாரி கேன் வென்றுள்ளார். பேயர்ன் முனிச் அணிக்காக இந்த பருவத்தில் 61 கோல்களைக் குவித்து அசத்திய 33 வயதான கேன், கிலியன் எம்பாப்பே மற்றும் லமீன் யமால் ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி தனது முதல் பலோன் டி’ஓர் விருதைக் கைப்பற்றினார்.
பெண்களுக்கான விருதை ஸ்பெயினின் அலெக்சியா புதெல்லாஸ் 3வது முறையாக வென்றார். சிறந்த இளம் வீரருக்கான கோபா விருதை லமீன் யமால் தொடர்ந்து 3வது முறையாகப் பெற்றார். சிறந்த ஆண்கள் கழகமாக பாரிஸ் செயின்ட் ஜெர்மைனும், சிறந்த பெண்கள் கழகமாக பார்சிலோனாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.


