
மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) அயல்நாட்டு பிரிவான கத்தார் மண்டலத்திற்கான புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சியின் தலைவர் மு. தமிமுன் அன்சாரி MLA அவர்களின் ஒப்புதலின் பேரில் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் எம். முகம்மது நாசர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, கத்தார் மண்டல செயலாளராக கருப்பூர் உபைஸ், அவைத் தலைவராக பரங்கிப்பேட்டை ஃபாரூக் மற்றும் பொருளாளராக பரங்கிப்பேட்டை ராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மண்டல துணைச் செயலாளர்களாக மஞ்சக்கொல்லை ஃபர்மானுல்லாஹ், மாயவரம் பாபு (ஜவஹர் அலி), சபரி (அப்துர் ரஹ்மான்), ஆயங்குடி ஷாஜகான் மற்றும் பரங்கிப்பேட்டை முஹம்மது முராத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், இளைஞரணி செயலாளராக ஏனங்குடி அசார், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக பூதமங்களம் தாரிக் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக மேலபாளையம் முத்தலிஃப், சத்தியமங்களம் அபுபக்கர் சித்திக் ஆகியோரும் பொறுப்பேற்றுள்ளனர்.
புதிய நிர்வாகிகளுக்கு மனிதநேய சொந்தங்கள் அனைவரும் நிர்வாக ரீதியாக முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு பொதுச்செயலாளர் எம். முகம்மது நாசர் கேட்டுக்கொண்டுள்ளார்.


