ஆசிய விளையாட்டுப் போட்டி: இலங்கை வீரர் ருமேஷ் தரங்கவிற்கு புதிய ஈட்டியை வழங்கியது விளையாட்டு அமைச்சகம்

ஜப்பானில் நடைபெறவுள்ள 20வது ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு முன்னதாக, இலங்கையின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரான ருமேஷ் தரங்க பத்திரகேவிற்கு புதிய ஈட்டி ஒன்றை வழங்க விளையாட்டு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சுவீடனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்தப் புதிய ஈட்டி, ஜப்பானில் வைத்து ருமேஷ் தரங்கிடம் ஒப்படைக்கப்பட்டதாக விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுவிட்டு இலங்கை திரும்பியபோது, ருமேஷின் ஈட்டிகள் சேதமடைந்தன. இதனால் அவரது பயிற்சிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக விளையாட்டு அமைச்சகம் இப்புதிய உபகரணத்தை வழங்கியுள்ளது. உலக தடகள ‘Ultimate Championship’ போட்டியில் 91.09 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து சாதனை படைத்த ருமேஷ் தரங்க, இம்முறை ஆசிய விளையாட்டில் இலங்கைக்கு பதக்கம் வென்று தருவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.