ரியாத் விமான நிலையத்தில் பாய்ந்த ஏவுகணை? எரிபொருள் கிடங்கு தீப்பற்றி எரிந்தது!

சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் அமைந்துள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் எரிபொருள் சேமிப்பு கிடங்கைக் இலக்குவைத்து எய்யப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் தாக்குதலால் அங்கு பிரம்மாண்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

யேமனின் அன்சாருல்லா (ஹூதி) அமைப்பினரால் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து விமான நிலையப் பகுதியிலிருந்து பெருமளவிலான தீப்பிழம்புகளும், விண்முட்டும் அடர்ந்த கரும்புகையும் எழும்பி வருகின்றன.

தாக்குதலைத் தொடர்ந்து ரியாத் நகர மக்களுக்கு வான்வழி ஆபத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், விமான நிலையத்தின் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு பல விமானங்கள் தாமதமடைந்துள்ளதுடன் ரத்தும் செய்யப்பட்டுள்ளன.