மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதலாம், மூன்றாம் கட்டப் பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை!

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்த–மீரிகம வரையிலான முதலாம் கட்டம் மற்றும் 32.85 கி.மீ கொண்ட மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரின் தலைமையிலான அதிகாரிகள் குழு நேற்று (18) கள விஜயம் மேற்கொண்டு திட்டங்களின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தது.

இதன் போது எரிபொருள், பொருட்கள் விநியோகம் மற்றும் ஊழியர்களின் நலன்கள் குறித்து விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டதுடன், உள்ளூர் ஒப்பந்த நிறுவனங்கள் உயர் செயல்திறனை வெளிப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட கட்டுமானத் துறையை மீளக்கட்டியெழுப்ப அரசாங்கம் ஆதரவளிக்கும் எனத் தெரிவித்த அமைச்சர், இருவழிப் பாதையாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கடிகமுவ பாலத்தின் பணிகளையும் பார்வையிட்டார்.