
முன்னாள் அரச புலனாய்வுச் சேவை பணிப்பாளர் சுரேஷ் சல்லேயின் உயிருக்கு ஆபத்தான இதய நோயைக் கருத்தில் கொண்டு, அவரது தடுப்புக் காவல் உத்தரவை நீடிக்கக் கூடாது என அவரது மனைவி ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கடிதம் மூலம் கோரியுள்ளார்.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை மூலம் ‘ICD’ கருவி பொருத்தப்பட்டுள்ள அவரை மீண்டும் CID காவலுக்கு மாற்றுவது உயிருக்கு ஆபத்தானது என்றும், எனவே அவரை நீதித்துறை மேற்பார்வையின் கீழ் விளக்கமறியலில் வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயார் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இக்கோரிக்கையை மனிதநேய அடிப்படையில் பரிசீலிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.


